சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் ஐரோப்பியப் பயணம் பற்றி சீன வெளியுறவு அமைச்சகம் அறிமுகம்
2024-05-10 18:43:55

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் ஹங்கேரி பயணம் குறித்து சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியன் 10ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 9ஆம் நாள் ஹங்கேரி அரசுத் தலைவர் சுல்யோக், தலைமையமைச்சர் ஒர்பான் ஆகியோருடன் முறையே பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் ஒர்பானுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போது சீன-ஹங்கேரி உறவு, வரலாற்றில் மிக சிறந்த காலக் கட்டத்தில் இருக்கிறது. இரு நாட்டு பாரம்பரிய நட்புறவு, மக்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்பு அதிக சாதனைகளைப் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்ட போது, அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரான்ஸ், செர்பியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளின் தலைவர்களின் உயர் நிலையிலான உபசரிப்பையும், அந்த நாடுகளின் பொது மக்களின் ஆரவாரமான வரவேற்பையும் பெற்றார். சீன-பிரான்ஸ் உறவு, சீன-செர்பிய உறவு மற்றும் சீன-ஹங்கேரி உறவின் வளர்ச்சி எதிர்காலம் மீது முழு நம்பிக்கை கொண்டு, சீன-ஐரோப்பிய உறவின் வளர்ச்சியை முன்னேற்றுவோம் என்று லின் ஜியன் சுட்டிக்காட்டினார்.