தேசிய டிஜிட்டல் நெடுநோக்குத் திட்டம் இலங்கை ஒப்புதல்
2024-05-10 18:40:35

டிஜிட்டல் அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்தைக் கொண்ட ஆறு முக்கிய அம்சங்களைக் தேசிய டிஜிட்டல் நெடுநோக்கு  2030 திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தொழில்நுட்ப  அமைச்சர் கனக ஹேரத் 9ம்  நாள் தெரிவித்தார்.

இதுகுறித்து ஊடகங்களிடம்  பேசிய அமைச்சர் கனக ஹேரத்   முதல்கட்டமாக உள்கட்டமைப்பு, இணைப்பு, அணுகல், திறன்கள், கல்வியறிவு, தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து சைபர் பாதுகாப்பு, தரவுகள் பாதுகாப்பு, தனியுரிமை, டிஜிட்டல் நிதி சேவைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களின் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சகம் கூட்டாக இணைந்து உலகளாவிய திட்ட ஊக்குவிப்பு மாநாடு ஜூன் 25 ஆம் நாள் நடைபெறவுள்ளதாக அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதிக்குள், 1,500  பள்ளிகளில், மாணவர்கள் எளிதில் அணுகக்கூடிய தொழில்நுட்பம் வசதிகள் கொண்ட வகுப்பறைகளை அமைக்க, அரசு செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.