சீன-ஹங்கேரி புதிய யுகத்தில் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவுக்கான கூட்டறிக்கை
2024-05-10 09:00:50

ஹங்கேரி அரசுத் தலைவர் தாமஸ் சுல்யோக், தலைமை அமைச்சர் விக்டர் ஒர்பான் ஆகிய இருவரின் அழைப்புக்கிணங்க, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மே 8ஆம் முதல் 10ஆம் நாள் வரை, அந்நாட்டில் அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டார். அவர்கள் இருவருடன் ஷிச்சின்பிங் சந்தித்துரையாடினார். இரு தரப்புறவு, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் குறித்து இரு நாடுகளின் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிகொண்டு, பரந்தளவில் ஒருமித்த கருத்துக்களை எட்டியுள்ளனர்.

இரு நாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவின் போது, இரு தரப்புகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. தற்போதைய பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை புதிய யுகத்தில் அனைத்து நேரத்திலும் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவுக்கு உயர்த்த இரு தரப்பும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டன.