புதிதாக நியமிக்கப்பட்ட இந்தியாவுக்கான சீன தூதர் பதவியேற்பு
2024-05-10 19:00:32

இந்தியாவுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட சீன தூதரான சூ ஃபெய்ஹோங் 10ம் நாள் புதுதில்லியில் பொறுப்பேற்றதாக இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான 17வது சீன தூதரான சூ கூறியதாவது, இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு மற்றும் நட்புறவை ஆழப்படுத்துவது, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது, இருதரப்பு உறவை மேம்படுத்துவது மற்றும் முன்னேற்றுவது ஆகியவை தனது முன்னுரிமைகள் என்று கூறினார்.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், தூதாண்மை துறைத் முதல்வர், இந்தியாவுக்கான எரித்திரியா நாட்டின் தூதர் மற்றும் சீன தூதரகத்தின் அதிகாரிகள், சூ மற்றும் அவரது மனைவியை விமான நிலையத்தில் வரவேற்றதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.