ஹங்கேரி-சீன மொழிகள் பள்ளியைப் பார்வையிட்ட பொங் லீயுவான்
2024-05-10 09:38:33

ஹங்கேரி தலைமையமைச்சரின் மனைவி ரெவாய் அம்மையாருடன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் மனைவி பொங் லீயுவான் அம்மையார் மே 9ஆம் நாள் பிற்பகல் புடாபெஸ்ட்டில் உள்ள ஹங்கேரி-சீன இரு மொழிகள் பள்ளியைப் பார்வையிட்டார்.

பள்ளியைப் பார்வையிட்ட பின் பொங் லீயுவான் கூறுகையில், ஹங்கேரி-சீன இரு மொழிகள் பள்ளியானது, இரு நாட்டு நட்பின் சின்னமாக விளங்குகின்றது. மாணவர்கள் சீன மொழியில் நன்றாக பேசுவதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் என்று தெரிவித்தார். மாணவர்கள் சீன மொழி மற்றும் பண்பாட்டை முயற்சியுடன் கற்றுக் கொண்டு, பயணம் மற்றும் படிப்புக்காக சீனாவுக்குச் செல்ல வேண்டும் என்றும், சீன-ஹங்கேரி நட்பின் முன்னேற்றத்துக்குப் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.