ஹங்கேரி தலைமை அமைச்சரின் பேட்டி
2024-05-11 16:18:03

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஹங்கேரியில் பயணம் மேற்கொண்ட போது, ஹங்கேரி தலைமை அமைச்சர் விக்டர் ஓர்பன் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், சீனாவுடன் தூதாண்மை உறவை மிக முன்னதாக நிறுவிய நாடுகளில் ஹங்கேரியும் ஒன்றாகும். சீனாவை உறவினர் மற்றும் நண்பராகக் கருதி வருகிறோம். சீனா பெரும் வளர்ச்சி பெறுவது, உலக பொருளாதாரத்துக்கு ஒரு புதிய உந்து சக்தி தருவதோடு, மற்ற நாடுகளுக்கு மேலதிக வாய்ப்புகளையும் கொண்டு வரும். சீன-ஹங்கேரி ஒத்துழைப்பு, எங்கள் நாட்டின் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொருளாதாரத்துக்கு உறுதியாக நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

சீனாவின்“அதிக உற்பத்தி திறன்”பிரச்சாரத்தைத் தீவிரமாக்கி, சீனாவின் மின்சார வாகன உற்பத்தி மீது விசாரணை மேற்கொள்வதாக அறிவித்த சில ஐரோப்பிய நாடுகளின் செயல்பாடு, முழு ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்து அவர் கூறுகையில், அச்சுறுத்தலுக்குப் பதிலாக, சீனாவை வாய்ப்பாகக் கருத வேண்டும். உலகளவில் முதலிடம் வகிக்க விரும்பினால், அதிக போட்டியாற்றல் இருக்க வேண்டும். போட்டியாற்றலுக்காக தன்னை உயர்த்த வேண்டும். மற்றவர்களின் வளர்ச்சியைத் தடுக்கக் கூடாது. போட்டியானது, ஹங்கேரிக்குச் சாதகமானது. எங்களுக்குச் சந்தையும் ஒத்துழைப்பும் தேவை என்றும் தெரிவித்தார்.

மேலும், ஷிச்சின்பிங்கின் ஐரோப்பிய பயணம், சீனாவின் திறப்பு மனப்பாங்கையும், ஐரோப்பிய நாடுகளுடன் ஒத்துழைக்கும் விருப்பத்தையும் காட்டியுள்ளது. ஒத்துழைப்பின் சரியான பாதையில் நடைபோட வேண்டும் என்றும் ஓர்பன் தெரிவித்தார்.