நட்புப் பரவல், ஒற்றுமை மேம்பாடு மற்றும் எதிர்காலத் திறப்புக்கான வெற்றி பயணம்
2024-05-11 16:13:19

மே 5ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரை, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிரான்ஸ், செர்பியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இப்பயணம் பற்றி செய்தியாளர்களிடம் எடுத்துக்கூறினார்.

வாங் யீ கூறுகையில், 5 நாட்களில் அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு பற்றிய 30க்கும் மேற்பட்ட பல்வகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மூன்று நாடுகளின் அரசு தலைவர்கள் ஷிச்சின்பிங்கின் இப்பயணத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, மிகவும் பிரமாண்டமான வரவேற்பை வழங்கினர். ஷிச்சின்பிங்கின் இப்பயணம், சீன-பிரான்ஸ் மற்றும் சீன-செர்பிய உறவை வலுப்படுத்துவதுடன், சீன-ஹங்கேரிய உறவையும் மேம்படுத்துகிறது. சீனா-ஐரோப்பிய ஒத்துழைப்பு மீண்டும் தொடங்குகிறது. இப்பயணம், நட்புறவைத் தொடர்ந்து வளர்ப்பது, பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவது மற்றும் எதிர்காலத்தைத் திறப்பது ஆகியவற்றுக்கு ஒரு வெற்றிப் பயணமாகும்.