சீனாவின் தொழில் சின்ன தினம் நடவடிக்கை துவக்கம்
2024-05-12 19:57:00

2024ஆம் ஆண்டு சீனாவின் தொழில் சின்ன தினம் என்னும் நடவடிக்கை மே திங்கள் 10ஆம் நாள் ஷாங்காயில் துவங்கியது. இவ்வாண்டு, சீனத் தொழில் சின்னப் பொருட்காட்சி அளவு சுமார் 70,000 சதுர மீட்டராகும். 1800 புகழ்பெற்ற தொழில் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை இதில் காட்சிக்கு வைத்துள்ளன.

சீனாவின் தொழில் சின்ன தினம் என்னும் நடவடிக்கையில் வைக்கப்பட்டுள்ள சீனாவின் தற்சார்புப் புத்தாக்கத்தன்மை வாய்ந்த தொழில் நுட்பங்களும் சாதனங்களும் கவனத்தை ஈர்த்துள்ளன. சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், சீனத்தொழில் சின்னக் கட்டுமான பணியின் வளர்ச்சியை முன்னேற்ற மேலதிகமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.