ரஷிய எல்லை அருகில் நேட்டோ பாரச்சூட் படை பயிற்சி
2024-05-13 09:42:02

ரஷியாவை ஒட்டி அமைந்துள்ள எஸ்டோனியாவில் நேட்டோவின் உறுப்பு நாடுகள் மே 11 மற்றும் 12ம் நாட்களில் பாரச்சூட் படை பயிற்சி மேற்கொண்டன. இந்த பயிற்சி ரஷிய எல்லையின் அருகில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மரியா சாஹரோவா அம்மையார் கூறுகையில், ரஷியாவின் எல்லையின் அருகில் ராணுவப் பயிற்சியை நேட்டோ மேற்கொள்வது, ரஷியாவுக்கு ஆத்திரமூட்டல் நடத்தையாகும். நேட்டோவின் உறுப்பு நாடுகள், தற்போதைய நிலைமையை தீவிரமாக்கும் நோக்கம், இதன் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.