காசா பகுதியில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்:ஐ.நா
2024-05-13 09:39:38

காசா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகளைத் தொடுத்து வருகிறது. காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். உள்ளூர் பகுதியில் மனித நேய பேரிடரில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரேஸ் மற்றும் ஐ.நாவின் அமைப்புகள் 12ஆம் நாள் மீண்டும் வலியுறுத்தின.  

கடந்த ஒரு வாரத்தில், ரஃபா பகுதியிலிருந்து சுமார் 3 இலட்சம் பாலஸ்தீன மக்கள் வெளியேறியுள்ளர். இதில் பெரும்பாலான மக்கள் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலில் மீண்டும் வீடுவாசலின்றி அல்லல்பட்டுள்ளனர் என்று அண்மை கிழக்கு பகுதிக்கான ஐ.நாவின் பாலஸ்தீன அகதிகள் நிவாரணம் மற்றும் பணி முகாம் 12ஆம் நாள் சமூக ஊடகத்தின் மூலம் வெளியிட்டது.