பாலஸ்தீனம் குறித்த ஐ.நா.பேரவையின் தீர்மானத்துக்கு சீனா ஆதரவு
2024-05-13 20:50:36

பாலஸ்தீனம் ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ உறுப்பு நாடாக இருப்பதற்கான தகுதிகள் குறித்து முடிவு செய்யும் விதம், மே 10ஆம் நாள் ஐ.நா.பேரவையின் 10வது சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இத்தீர்மானத்துக்கு, ஆதரவாக 143 வாக்குகளும், எதிராக 9 வாக்குகளும் பதிவாகின. 25 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் 13ஆம் நாள் கூறுகையில், ஐ.நா.பேரவையின் தீர்மானத்தை சீனா ஆதரிக்கின்றது. கூடிய விரைவில் ஐ.நா.வில் இணைவதற்கான பாலஸ்தீனத்தின் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்யுமாறு சீனா வேண்டுகோள் விடுக்கின்றது என்று தெரிவித்தார்.