ரஷிய தலைமையமைச்சருக்கு லீ ச்சியாங் வாழ்த்து செய்தி
2024-05-13 10:34:49

ரஷிய தலைமையமைச்சராக மீண்டும் பதவியேற்ற மிக்கேல் விளாடிமிரோவிச் மிஷுஸ்டினுக்குச்சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் மே 12ஆம் நாள் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

லீ ச்சியாங் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினின் நெடுநோக்கு வழிகாட்டலில், சீனாவும் ரஷியாவும் புதிய காலத்தில் பன்முக நெடுநோக்கு ஒருங்கிணைப்பு கூட்டாளி உறவு சீரான மற்றும் நிதானமான வளர்ச்சியை நிலைநிறுத்த வேண்டும். மிஷுஸ்டினுடன் இணைந்து பணியாற்றி இரு நாட்டு உறவின் உள்ளடக்கத்தை வளப்படுத்தி, இரு நாட்டுப் பயனுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குப் புதிய பங்காற்ற லீ ச்சியாங் விருப்பம் தெரிவித்தார்.