சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஈ.எஸ்.ஜி. செயல் அறிக்கை வெளியீடு
2024-05-14 09:53:02

சீன ஊடகக் குழுமம் வழங்கிய சீனாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஈ.எஸ்.ஜி. செயல் அறிக்கை மே 13ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஈ.எஸ்.ஜி. என்பது சுற்றுச்சூழல்(Environmental), சமூகம்(Social) மற்றும் நிர்வாகம்(Governance) ஆகிய ஆங்கில சொற்களின் முதல் எழுத்தாகும். தொழில் நிறுவனங்களின் தொடரவல்ல வளர்ச்சிக்கான முக்கிய மதிப்பீட்டு அம்சமாகவும் சமூகப் பொறுப்பாகவும் இவை விளங்கியுள்ளன.

சீனப் பாணி நவீனமயமாக்கலின் வளர்ச்சி வாய்ப்பை சீனாவிலுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் எவ்வாறு பின்பற்றுவது, ஈ.எஸ்.ஜி தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புகளை எப்படி ஆழமாக நடைமுறைப்படுத்துவது, சீனாவின் தொடரவல்ல வளர்ச்சிக்கு புதிய உந்து ஆற்றல் கொண்டு வருவது ஆகியவை இவ்வறிக்கையிலுள்ள முக்கிய அம்சங்களாகும்.