காசா பிரதேசத்தில் 35173 பேர் உயிரிழப்பு
2024-05-14 14:41:42

கடந்த ஒரு நாளில் காசா பிரதேசத்தில் இஸ்ரேல் படை மேற்கொண்ட ராணுவத் தாக்குதலில் 82 மக்கள் உயிரிழந்தனர். 234 பேர் காயமடைந்தனர் என்று மே 14ம் நாள் காசா பிரதேசத்தின் சுகாதார அமைப்பு தெரிவித்தது.

கடந்த ஆண்டின் அக்டோபர் 7ம் நாள் பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் மூண்டது. இதுவரை காசா பிரதேசத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து 173ஐ எட்டியது. 79ஆயிரத்து 61 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.