சீனாவின் மின்சார வாகனம் உள்ளிட்ட பொருட்கள் மீது அமெரிக்கா சுங்க வரியை உயர்த்தியதிற்கு சீனா மனநிறைவின்மை
2024-05-14 20:35:21

மின்சார வாகனம், லித்தியம் மின்கலம், சூரிய மின்கலம் உள்ளிட்ட சீன தயாரிப்புகள் மீது கூடுதலான சுங்க வரியை மேலும் உயர்த்துவதாக அமெரிக்க அரசு 14ஆம் நாள் அறிவித்த்து. அமெரிக்காவின் இச்செயல், வர்த்தக பாதுகாப்புவாதத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும். இது, உலகப் பொருளாதாரத்தின் பசுமை மாற்றத்தை பாதிப்பதுடன், காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான உலகளாவிய முயற்சியையும் சீர்குலைக்கும்.

அமெரிக்க வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் சீனா மீது கூடுதலான சுங்க வரியை உயர்த்துவது தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட 4 ஆண்டுக்கால மறுபரிசீலனை முடிவு குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அன்று கருத்து தெரிவித்தார்.  உள்நாட்டில் அரசியல் காரணியைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா மேலதிகமாக சுங்க வரியை உயர்த்துவது, பொருளாதார வர்த்தக பிரச்சினையை அரசியல் தந்திரத்துக்கு பயன்படுத்துவது போன்றதாகும். இதற்கு சீனா மிகவும் மனநிறைவின்மை தெரிவிக்கிறது. 301ஆவது பிரிவு தொடர்பான சுங்க வரி, உலக வர்த்தக அமைப்பின் விதிமுறையை மீறியதாக உலக வர்த்த்க அமைப்பு தீர்ப்பு அளித்தது என்று சுட்டிக்காட்டினார்.

சீனாவின் வளர்ச்சியை ஒடுக்குவதையோ சீனாவுடன் பொருளாதார தொடர்பை துண்டிப்பதையோ நாடவில்லை என்ற அந்நாட்டு அரசுத் தலைவர் ஜோ பைடனின் மனவுறுதியை அமெரிக்காவின் இச்செயல் மீறியுள்ளதோடு, இரு தரப்பு ஒத்துழைப்புச் சூழலை கடுமையாக மீறியுள்ளது என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.