பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றிய சீன-பாகிஸ்தானின் பொருளாதார இடைவழி
2024-05-14 09:59:52

பாகிஸ்தானின் திட்ட வரைவு, வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டப்பணி அமைச்சர் அஹ்ஸான் இக்பால் சீன-பாகிஸ்தானின் பொருளாதார இடைவழி ஒத்துழைப்பை எப்போதும் பெரிய அளவில் முன்னேற்றி வருகின்றார். எனவே அவர் "திரு. சீனா-பாகிஸ்தான் பொருளாதார இடைவழி" என்று அழைக்கப்படுகிறார். சீன-பாகிஸ்தானின் பொருளாதார இடைவழி பாகிஸ்தானின் எரியாற்றல் மற்றும் அடிப்படை வசதிகளின் நிலைமையை மாற்றி, பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி, உள்ளூர் மக்களுக்கு நன்மை புரியும் என்று அண்மையில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டில் சீன-பாகிஸ்தானின் பொருளாதார இடைவழி

தொடங்கப்பட்ட காலத்தில், பாகிஸ்தான் கடுமையான மின் பற்றாக்குறையை எதிர்கொண்டது. பாகிஸ்தானுக்கு இன்னல்களைச் சமாளிக்கச் சீனா உதவியது என்றார் அவர்.