ஒரே சீனா என்ற கோட்பாடு:உலக மக்கள் எட்டியுள்ள ஒத்த கருத்துக்கள்
2024-05-15 09:39:10

77 வது உலகச் சுகாதார மாநாட்டின் பதிவு பணி 13ஆம் நாள் முடிவடைந்தது. எதிர்பார்த்தபடி, தைவான் நிராகரிக்கப்பட்டது. இதில் தைவான் ஜனநாயக முன்னேற்ற கட்சி தொடர்ந்து 8 முறையாக தோல்வியடைந்து வருகின்றது. ஒரே சீனா என்ற கோட்பாடு சர்வதேசச் சமூகத்தின் பொது ஒத்த கருத்தாகும் என்பதை இது முழுமையாகக் காட்டுகின்றது.

முதலாவது, சீன மத்திய அரசின் அனுமதியின்றி தைவானுக்கு உலக சுகாதார அமைப்பில் பங்கேற்க எந்த அடையாளமும் அதிகாரமும் இல்லை. இரண்டாவது, உலக சுகாதார மாநாட்டில் தைவான் பங்கேற்க அனுமதிக்கப்படாது, "சர்வதேச தொற்றுநோய் தடுப்பு அமைப்பில் இடைவெளியு ஏற்படும் என்பது, முற்றிலும் நகைப்பிற்குரியது. மூன்றாவது, தைவான் உலகச் சுகாதார மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆதரிப்பதற்கான காரணம் உண்மையில் தைவானை ஒரு துண்டாக கருதுவதாகும்.

ஆனால், அமெரிக்கா எவ்வாறு ஆதரித்தாலும், தைவான் ஜனநாயக முன்னேற்ற கட்சி எவ்வாறு அவதூறுகளை உருவாக்கினாலும், தைவான் உலக சுகாதார அமைப்பில் பங்கேற்க முடியாது. ஒரே சீனா என்ற கோட்பாடு, உலக மக்களின் விருப்பம் மற்றும் வரலாற்றுப் போக்காகும் என்பதை உண்மை காட்டுகின்றது.