சாலமன் தீவு புதிய வெளியுறவு அமைச்சருக்கு சீனாவின் வாழ்த்துக்கள்
2024-05-15 12:05:31

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 14ஆம் நாள், புதிதாக பதவி ஏற்றுள்ள சாலமன் தீவுகள் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் அகொவாகாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இரு நாடுகளின் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 5 ஆண்டுகாலத்தில், இரு நாட்டுத் தலைவர்களின் நெடுநோக்கு தலைமையில், இரு தரப்புகளின் ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை வலுப்படுத்தி, கூட்டு நலன் தரும் ஒத்துழைப்பில் சாதனைகளைப் பெற்று, பிரதேசத்தின் நிதானம், வளர்ச்சி மற்றும் செழுமையையும் விரைவுபடுத்தியுள்ளன என்று வாங்யீ தெரிவித்தார்.

இரு தரப்புறவில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இரு நாடுகளின் பேச்சுவார்த்தையையும் தொடர்பையும் ஆழமாக்கி, இரு தரப்புறவை புதிய காலக்கட்டத்திற்குத் தூண்ட வேண்டும் என்றார் அவர்.