ரஃபா நுழைவாயில் மீண்டும் திறக்க வேண்டும்:ஐ.நா
2024-05-15 09:48:55

ஐ.நா பொதுச் செயலாளர் குட்ரெஸ் மே 14ஆம் நாள், ரஃபா நிலைமை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இப்பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் தீவிரமாக்குவது குறித்து அதிர்ச்சியை அவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலைமை மனித நேய உதவி இப்பகுதியில் நுழைவதை தடுத்துள்ளது. மோசமாகியுள்ள நிலைமை மேலும் தீவிரமாகியுள்ளது. அப்பாவி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும். ரஃபா நுழைவாயிலை மீண்டும் திறக்க வேண்டும். காசா பகுதியில் மனித நேய வழியை தடையின்றி பயன்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.