ஆடம்பரக் கப்பல் மூலம் சீனா வரும் வெளிநாட்டு சுற்றுலாக் குழுவுக்கு விசா விலக்குக் கொள்கை
2024-05-15 18:42:40

ஆடம்பரக் கப்பல் மூலம் சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா குழுவினருக்கு மே 15ஆம் நாள் முதல் விசா விலக்குக் கொள்கை அமலுக்கு வருகிறது என்று சீனத் தேசிய குடியேற்ற நிர்வாக அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது.

அதன்படி,  ஆடம்பரக் கப்பல் மூலம் சீனாவை வந்தடைந்து, உள்நாட்டின் சுற்றுலா சேவை நிறுவனங்களால் வரவேற்கப்படும் வெளிநாட்டு சுற்றுலா குழு ( 2பேர் மற்றும் 2 பேருக்கும் மேல்) , சீனாவின் கடலோரப் பகுதிகளில் உள்ள அனைத்து எல்லை நுழைவுகளிலும் விசா விலக்கு விண்ணப்பிக்கலாம். பயணிகள், கடலோர மாநிலங்கள் மற்றும் பெய்ஜிங் ஆகியவற்றில் அதிகப்பட்சமாக 15 நாட்களுக்கு தங்க அனுமதிக்கப்படுவர்.