சீன மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுக்கிடையே 5ஆவது நெடுநோக்கு பேச்சுவார்ர்தை
2024-05-15 18:45:17

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, பாகிஸ்தான் துணை வெளியுறவு அமைச்சரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் தார் ஆகியோர், சீன மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களுக்கிடையே 5ஆவது நெடுநோக்கு பேச்சுவார்த்தையை 15ஆம் நாள் பெய்ஜிங்கில் நடத்தினர்.

இதில் வாங்யீ கூறுகையில், தொழில் துறை ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்தை இரு தரப்புகள் பயனுள்ள முறையில் செயல்படுத்த வேண்டும். தொழில்துறை, விவசாயம், சுரங்கம், புதிய எரியாற்றல், தகவல் மற்றும் தொழில் நுட்பம் முதலிய துறைகளிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, வர்த்தக தாளாரமயமாக்கத்தை முன்னேற்றுவது பற்றி மேலும் கலந்தாய்வு நடத்த வேண்டும். பாகிஸ்தான், பாதுகாப்பு, சாதகமான வணிகச் சூழலை தொடர்ந்து உருவாக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

மேலும், ஐ.நா.,ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பலதரப்பு அமைப்புமுறைகளில், பாகிஸ்தானுடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, வளரும் நாடுகளின் கூட்டு பலன்களைக் கூட்டாக பேணுவோம் என்றும் வாங்யீ தெரிவித்தன.

தார் கூறுகையில், சீனாவுடனான உறவு, பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை ஆகும். இரு நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளின் நடைமுறையாக்க ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்குவதை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் உறுதியுடன் வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களை ஒழித்து, பாகிஸ்தானில் உள்ள சீனர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.