சீன தரப்பின் நல்லெண்ணத்தை பிலிப்பைன்ஸ் தவறாகப் பயன்படுத்தினால், பதில் நடவடிக்கை மேற்கொள்ளும்: சீன வெளியுறவு அமைச்சகம்
2024-05-15 19:59:47

ஹுவாங்யான் தீவு, சீனாவின் உரிமைப் பிரதேசங்களில் ஒன்றாகும். ஹுவாங்யான் தீவு மற்றும் அதன் அருகிலுள்ள கடற்பரப்பு மீது சர்ச்சைக்கு இடமில்லாத இறையான்மையை சீனா கொண்டுள்ளது. பிலிப்பைன்ஸில் இருந்து சிறிய அளவிலான சிறு ரக மீன்பிடி படகுகள், அந்த தீவின் அருகில் மீன்பிடிப்பது குறித்து சீனா 2016ஆம் ஆண்டு நல்லெண்ணத்துடன் ஏற்பாடு செய்த அதேவேளையில் சட்டப்படி, பிலிப்பைன்ஸ் மீனவர்களின் நடவடிக்கைகள் மீது மேலாண்மை மற்றும் மேற்பார்வை மேற்கொண்டும் வருகிறது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 15ஆம் நாள் தெரிவித்தார்.

அன்று சுமார் 200 பேருடன் 5 வணிக மீன்பிடி கப்பல்கள் பிலிப்பைன்ஸில் இருந்து ஹுவாங்யான் தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பை நோக்கி செல்வது தொடர்பாக, செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளிக்கையில் வாங் வென்பின் இவ்வாறு பதில் கூறினார்.

பிலிப்பைன்ஸ் சீன தரப்பின் நல்லெண்ணத்தைத் தவறாகப் பயன்படுத்தி, சீனாவின் உரிமை பிரதேசத்தின் இறையாண்மை மற்றும் நிர்வாக அதிகாரத்தை மீறினால், சீனா சட்டப்படி தனது உரிமையைப் பேணிக்காத்து பதில் நடவடிக்கை மேற்கொள்ளும். அதற்கான பொறுப்பு மற்றும் பின்விளைவுகளை பிலிப்பைன்ஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.