புதிதாக பதவி ஏற்றுள்ள சிங்கபூர் தலைமையமைச்சருக்கு வாழ்த்துக்கள்: சீனா
2024-05-16 12:07:01

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் மே 15ஆம் நாள், தொலைபேசி மூலம், சிங்கப்பூர் புதிய தலைமையமைச்சர் லாரன்ஸ் வோங்கிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

சீனாவும் சிங்கபூரும் நட்பார்ந்த அண்டை நாடுகளாகவும் முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளிகளாகவும் விளங்குகின்றன. இரு நாடுகளின் தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 30 ஆண்டுகளில், இரு தரப்புகளுக்கிடையில் ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கை அதிகரித்ததுடன், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளில் அதிக சாதனைகளும் படைக்கப்பட்டன. இது, சொந்த வளர்ச்சிக்கு ஆதரவை வழங்கியுள்ளது. தவிரவும், பிரதேச நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்புக்கு முன்மாதிரியை உருவாக்கியுள்ளது. இரு தரப்பு உறவின் வளர்ச்சியில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. லாரன்ஸ் வோங்கிற்குடன் நெருக்கமாக ஒத்துழைப்பு மேற்கொண்டு, இரு தரப்புகளுக்கிடையில் உயர் தரமுள்ள ஒத்துழைப்பை விரைவுபடுத்தி, பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்தி, இரு நாடுகளின் மக்களுக்கு மேலதிகமான நன்மை பயத்து, பிரதேசத்தின் அமைதி, நிதானம் மற்றும் செழுமைக்கு சீனா மேலும் முக்கிய பங்காற்றும் என்று லீச்சியாங் தெரிவித்தார்.