‘அதிக உற்பத்தி’ என்ற கூற்றுக்கு ஆதாரமில்லை: சீன வணிக அமைச்சகம்
2024-05-16 19:34:39

‘அளவுக்கும் அதிகமான உற்பத்தி’ என்ற கூற்று, பொதுஅறிவுக்குப் புறம்பானது. இத்தகைய கூற்றை வெளிப்படுத்துவதற்கு, காரணமோ அல்லது ஆதாரமோ இல்லை என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹெ யாடொங் 16ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சீனாவில்‘அதிக உற்பத்தி’ உள்ளதாக சமீபத்தில் அடிக்கடி குற்றஞ்சாட்டிய சில மேற்கத்திய நாடுகள், சீனாவின் புதிய ஆற்றல் தயாரிப்புகள் சர்வதேச சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கூறியது. இது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தபோது

உலக நாடுகள் தத்தமது சாதகங்களை கொண்டு, வேலைப்பிரிவு மற்றும் ஒத்துழைப்பு முறையின்படி செயல்பட்டு வரும் அடிப்படையில் சர்வதேச வர்த்தகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.  அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட சில்லுகள் சுமார் 80விழுக்காட்டு அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள், முறையே 80 மற்றும் 50 விழுக்காட்டு அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதேவேளையில், சீனாவில் 12 லட்சம் மின்சார வாகனங்கள் மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த பங்கு விகிதமானது, நாட்டின் மொத்த உற்பத்தியில் 12.7 விழுக்காடு இடம்பிடித்தது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகியவற்றின் ஏற்றுமதி  இயல்பானது என்று கூறினால், சீனாவின் புதிய ஆற்றல் தயாரிப்புகளின் ஏற்றுமதி மட்டும் எப்படி அளவுக்கு அதிகமாக இருக்கும் என கேள்வியை எழுப்புகிறோம் என்று குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த நிலையில், உலகளாவிய புதிய ஆற்றல் தொழில்துறை இன்னும் ஆரம்ப கட்டத்திலும் விரைவான வளர்ச்சிக் கட்டத்திலும் இருக்கிறது.  அதன் உற்பத்தி, அளவுக்கும் அதிகம் இல்லை. மாறாக, பற்றாக்குறை நிலையிலேயே உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.