ஆப்கானின் பேரிடர் நிவாரணப் பணிக்கு இயன்ற அளவில் உதவியளிப்போம் - சீனா
2024-05-17 10:41:10

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 16ஆம் நாள் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த கடும் வெள்ளப்பெருக்குப் பாதிப்பு குறித்து அந்நாட்டு இடைக்கால அரசின் தற்காலிக வெளியுறவு அமைச்சர் முட்டாகிக்கு ஆறுதல் செய்தி அனுப்பினார்.

அச்செய்தியில் வாங்யீ கூறுகையில், அண்மையில் ஆப்கானின் பல இடங்களில் கடும் வெள்ளப்பெருக்கு பாதிப்பினால் கடும் உயிர் மற்றும் உடைமை இழப்பு ஏற்பட்டதை அறிந்தேன். உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தவர்களுக்கும் மனமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆப்கானின் தேவைக்கிணங்க, பேரிடர் நிவாரணப் பணிக்குச் சீனா இயன்ற அளவில் உதவியளிக்க விரும்புவதாகவும் வாங்யீ தெரிவித்தார்.