ஸ்லோவாக்கிய தலைமையமைச்சருக்கு சீனத் தலைமையமைச்சர் ஆறுதல்
2024-05-17 18:53:22

துப்பாக்கி சூட்டில்காயமடைந்த ஸ்லோவேகியா தலைமையமைச்சர் ராபர்ட் ஃபிகோவுக்கு சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 17ஆம் நாள் ஆறுதல் செய்தி அனுப்பினார்.

அதில், ராபர்ட் ஃபிகோ தாக்கப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியதாகவும், வெகுவிரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.