சீனாவின் ஹூவாங்யன் தீவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பிலிப்பைன்சின் அரசு சாரா அமைப்பின் படையெடுப்பு தோல்வி
2024-05-17 10:22:39

திட்டமிடப்பட்ட இலக்கு பணி "வெற்றிகரமாக" முடிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் ஹூவாங்யன் தீவைச் சுற்றியுள்ள 12 கடல் மைல் கடற்பரப்பில் படையெடுக்க விரும்பும் பிலிப்பைன்ஸ் அரசு சாரா அமைப்பு கூறியுள்ளது.

சீனாவின் கடல்சார் உரிமை பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கப் படைகள் சீனாவின் ஹூவாங்யன் தீவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் உரிமை பாதுகாப்பு சட்ட அமலாக்கப் பணிகளைச் செய்து வருகின்றன. அவை, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பின் படகுகளைப் பார்க்கவில்லை. உண்மையில், இந்த அமைப்பின் மீன்பிடி படகுகள் சீனாவின் ஹுவாங்யன் தீவிலிருந்து 50 கடல் மைல்களுக்கு தொலைவிலேயே காணப்பட்டன. எனவே, "பணி வெற்றி" நிலைமை எனக் கூறப்படுவது உண்மையான ஒன்றல்ல என்று தகவல் அறிந்த ஒருவர் தெரிவித்தார்.

பிலிப்பைன்ஸ் அரசு சாரா அமைப்பு எனக் கூறிக்கொள்ளும் அந்த அமைப்பானது சீனக் கடல்சார் காவற்துறையினரால் தெளிவாக அதிர்ச்சியடைந்துள்ளது.