2023ஆம் ஆண்டு சீனாவில் உள்ள அருங்காட்சியகங்களை 129 கோடி மக்கள் பார்வையிட்டனர்
2024-05-18 19:03:37

சீனத் தேசிய தொல் பொருள் பணியகம் மே 18ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, சீனாவில் பதிவு செய்யப்பட்ட அருங்காட்சியகங்களின் மொத்த எண்ணிக்கை, 2012ஆம் ஆண்டில் இருந்த 3866யிலிருந்து 2023ஆம் ஆண்டில் 6833ஆக அதிகரித்துள்ளது. சராசரியாக 1.2 தினத்தில் ஒரு அருங்காட்சியகம் புதிதாக நிறுவப்பட்டது.

சீனாவில் அருங்காட்சியகத்தின் சேவை திறன் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பதிவு அமைப்பு முறை மேம்பட்டு, பண்பாட்டு சேவை செழிப்பாகி வருகிறது. 2023ஆம் ஆண்டு சீனாவில் உள்ள அருங்காட்சியகங்களில் 40 ஆயிரத்துக்கு மேலான கண்காட்சிகள் நடத்தப்பட்டன. 129 கோடி பார்வையாளர்கள் அருங்காட்சியகங்களைப் பார்வையிட்டனர். இது வரலாற்றில் மிக அதிகமாகும்.