காசா பிரதேசத்தில் தற்காலிக கப்பல் துறை பயன்பாட்டுக்கு வந்தது
2024-05-18 17:53:23

பாலஸ்தீனத்தின் பல ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, காசா பிரதேசத்தின் மத்திய கடலோரப் பகுதியில் அமெரிக்கா கட்டியமைத்த தற்காலிக கப்பல் துறை மே 17ஆம் நாள் பயன்பாட்டுக்கு வந்தது. மனித நேய உதவிப் பொருட்கள் கடல் வழியின் மூலம் காசா பிரதேசத்துக்கு அனுப்பப்படத் துவங்கியது.

தற்காலிக கப்பல் துறை, தரை வழியை ஈடு செய்ய முடியாது. பல்வகை உதவிகளைப் பெறுவதற்கான உரிமை, பாலஸ்தீன மக்களுக்கு உண்டு என்று பாலஸ்தீன ஹமாஸ் இயக்கம் 17ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.