சீன-பிரான்ஸ் உறவு பற்றிய பிரான்ஸ் முன்னாள் தலைமையமைச்சரின் கருத்து
2024-05-18 17:33:44

சீன-பிரான்ஸ் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பிரான்ஸ் முன்னாள் தலைமையமைச்சர் ஜீன்-பியர் ரஃபரின் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார்.

சீன-பிரான்ஸ் உறவு பற்றி அவர் கூறுகையில், இரு நாடுகளுக்குத் தொன்மை வாய்ந்த நாகரிகங்கள் உண்டு. இந்நாகரிகங்கள் உலகளவில் மதிப்பு அளிக்கப்படத்தக்கவை. அமைதியான தூதாண்மை உறவின் உருவாக்கத்தின் அடிப்படை இதுவாகும். சீனாவும் பிரான்ஸும் பல்வகைமையை மதித்து, பல்வேறு நாடுகள் வேற்றுமையுடன் கருத்தொற்றுமையை கண்டறிந்து கூட்டு வளர்ச்சி பெறுவதை எதிர்ப்பார்க்கின்றன என்றார்.

அவர் மேலும் கூறியதாவது, சீன மக்கள் பெற்றுள்ள சாதனைகள் உலகத்தை மிகவும் கவர்ந்துள்ளன. எதிர்காலத்தில், சீன மக்கள் தொடர்ந்து முக்கிய பங்காற்றவுள்ளனர். உலக வளர்ச்சிக்கு சீனா ஆற்றிய பங்கினை பிரான்ஸ் இளைஞர்கள் அறிந்து கொண்டு, சீன மக்களுடன் பயன்தரும் முறையில் பரிமாற்றங்களை மேற்கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

தவிரவும், சிக்கலான சர்வதேச சூழ்நிலையில், சீனாவும் பிரான்ஸும் தத்தமது ஞானத்தைப் பகிர்ந்து, உலகின் பல்வேறு நாடுகளுடன் இணைந்து சவால்களைச் சமாளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.