சீனாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் இடம் சேவைத் தொழிலின் வளர்ச்சி
2024-05-18 17:40:43

2024ஆம் ஆண்டு சீனாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் இடம் சேவைத் தொழிலின் வளர்ச்சி பற்றிய வெள்ளையறிக்கையை சீனாவின் GNSS மற்றும் LBS சங்கம் மே 18ஆம் நாள் வெளியிட்டது.

இவ்வறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு, சீனாவின் செயற்கைக்கோள் வழிசெலுத்தல் மற்றும் இடம் சேவைத் தொழிலின் மொத்த உற்பத்தி மதிப்பு 53 ஆயிரத்து 620 கோடி யுவானை எட்டி, 2022ஆம் ஆண்டில் இருந்ததை விட 7.09 விழுக்காடு அதிகரித்தது. தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சியுடன், பல்வேறு தொழில்களின் எண்ணியல்மயமாக்க வளர்ச்சி முறை மாற்றம் மற்றும் மேம்பாடு, செயற்கைக்கோள் வழிசெலுத்தல் சாதனங்களின் மீதான தேவை அதிகரித்துள்ளது. பெய்டோ செயற்கைக்கோள் வழிசெலுத்தல் தகவலின் பயன்பாடு மற்றும் சேவைச் சந்தையின் வளர்ச்சிக்கு இது உயிராற்றலை ஊட்டியுள்ளது.