டெல்லியில் அதிகப்பட்சமாக 47.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவு
2024-05-18 17:01:15

கோடைகால பருவத்தில் இந்திய தலைநகரான புதுடெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை வெப்பநிலை அதிகபட்சமாக 47.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

தென்மேற்கு டெல்லியில் உள்ள  நஜாஃப்கர் பகுதியில் அதிகபட்சமாக 47.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. முங்கேஷ்பூர் பகுதி, பாலம் பகுதி,  லோதி சாலை, நொய்டா, குருகிராம் என  டெல்லி நகரை ஒட்டியுள்ள பிற பகுதிகளிலும் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது.  மேலும்  அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப அலை தாக்கம் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெப்ப அலை தாக்கத்தால், நகரில் நான்கு இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.