தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் வாங்யீயுடன் சந்திப்பு
2024-05-19 16:50:09

தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் எமோமாலி ரஹ்மான், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீயுடன் மே 18ஆம் நாள் துஷான்பே நகரில் சந்திப்பு நடத்தினார்.

வாங்யீ கூறுகையில், சொந்த நாட்டின் நிலைமைக்குப் பொருந்திய வளர்ச்சி பாதையில் தஜிகிஸ்தான் முன்னேறுவதை சீனா தொடர்ந்து உறுதியுடன் ஆதரிப்பதோடு, வெளிப்புறச் சக்திகள் தஜிகிஸ்தானின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உறுதியுடன் எதிர்க்கிறது. மேலும், அரசுத் தலைவர் ரஹ்மான் முன்வைத்த எரியாற்றல், போக்குவரத்து, வேளாண்மை, தொழில்மயமாக்கம் ஆகிய 4 வளர்ச்சி நெடுநோக்குத் திட்டங்களுக்கு சீனா ஆக்கமுடன் ஆதரவளிக்கிறது. தஜிகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, எல்லா வடிவிலான பயங்கரவாதத்தையும் உறுதியுடன் ஒடுக்க சீனா விரும்புகிறது என்றார்.

ரஹ்மான் கூறுகையில், சீனாவுடனான உறவை முன்னேற்றுவது, தஜிகிஸ்தான் தூதாண்மை கொள்கையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சீனாவுடன் உயர்நிலை தொடர்புகளை நெருக்கமாக்கி, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை வலுப்படுத்தி, பலதரப்பு மேடைகளில் ஒருங்கிணைப்பை அதிகரிக்க தஜிகிஸ்தான் விரும்புகிறது என்று தெரிவித்தார்.