ரஃபா நகரில் இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை
2024-05-19 16:55:36

இஸ்ரேல் தேசிய பாதுகாப்புப் படை மே 18ஆம் நாள் வெளியிட்ட போர் அறிக்கையின்படி, இஸ்ரேல் தரை படைகள், காசா பிரதேசத்தின் தென் பகுதியிலுள்ள ரஃபா நகரில் 130க்கும் மேலான பாலஸ்தீன ஆயுதப் படையினர்களைச் சுட்டுக் கொன்றுள்ளன. அதோடு, பாலஸ்தீன ஆயுதப் படையின் தரைக்கடி வசதிகள் மற்றும் பெருமளவிலான ஆயுதங்கள் கண்டறியப்பட்டன.

ரஃபா நகரம், எகிப்துடன் எல்லை பகுதியில் உள்ளது. சர்வதேச மனித நேய உதவிப் பொருட்கள் காசா பிரதேசத்துக்கு அனுப்பப்படுகின்ற முக்கிய வழியாக இது திகழ்கிறது. உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, சுமார் 12 லட்சம் பாலஸ்தீன அப்பாவி மக்கள் ரஃபா நகரில் தஞ்சம் புகுந்துள்ளனர்.