இந்தியாவின் சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை, மழை பெய்யும் என முன்னறிவிப்பு
2024-05-19 16:26:49

இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்ப அலையின் தாக்கம் நீடிக்கும் என்றும், தெற்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் செவ்வாய்க்கிழமை வரை கன மழை பெய்யும் என்றும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான வெப்ப அலைகளின் தாக்கம் காணப்படுகின்றன, கடந்த வெள்ளிக்கிழமை வெப்பநிலை 47.4 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது.

சனிக்கிழமையன்று, இந்திய தலைநகரில் வெப்பநிலை 45-46 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகியுள்ளது. இரவில் வெப்பநிலை 32-39 டிகிரி செல்சியஸ்  என்ற அளவில் பதிவாகியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மேகாலயா மற்றும் தென் மாநிலமான தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது