பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒளிப்பரப்புக்கான சீன ஊடகக் குழுமத்தின் குழுவுக்கு அங்கீகார நிகழ்ச்சி
2024-05-19 19:47:33

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் தாமஸ் பாக், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியொங் ஆகியோர் மே 19ஆம் நாள் ஷாங்காயில், பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஒளிப்பரப்புக்கான சீன ஊடகக் குழுமத்தின் குழுவுக்கு அங்கீகார நிகழ்ச்சியைக் கூட்டாக நடத்தி, இந்த விளையாட்டுப் போட்டி ஒளிப்பரப்புக்கான சீன ஊடகக் குழுமத்தின் லட்சினையை வெளியிட்டனர்.

ஷென் ஹாய்சியொங் கூறுகையில், சீன ஊடகக் குழுமம் 8k தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஒளிப்பரப்புவது, உலகளவில் முதல் முறை. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைந்து தொழில் நுட்ப புத்தாக்கத்தை விரைவுப்படுத்துவது, மின்னணு விளையாட்டுப் போட்டிக்கான ஆய்வு உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து ஒத்துழைப்புகளை ஆழமாக்க சீன ஊடகக் குழுமம் விரும்புகிறது என்றார்.

பாக் கூறுகையில், சர்வதேச முன்னணியில் இருக்கின்ற சீன ஊடகக் குழுமத்தின் ஒளிப்பரப்பு திறன், ஒலிம்பிக் எழுச்சியைப் பரவல் செய்வதற்கு பெரும் பங்காற்றியுள்ளது. எதிர்காலத்தில், மின்னணு விளையாட்டுப் போட்டி, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில், சீன ஊடகக் குழுமத்துடன் ஒத்துழைப்புகளை ஆழமாக்கும் என்று தெரிவித்தார்.