சமத்துவ நிலையில் மேலை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா விருப்பம்
2024-05-19 17:33:13

சமத்துவ நிலைமையில் பாதுகாப்பு மற்றும் நெடுநோக்கு நிலைத்தன்மை பிரச்சினைகள் குறித்து மேலை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா விரும்புகிறது என்று ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் 18ஆம் நாள் மாஸ்கோவில் தெரிவித்தார்.

அன்று ரஷியாவின் சிந்தனை கிடங்கு, தூதாண்மை மற்றும் தேசியப் பாதுகாப்புக் கொள்கை ஆணையத்தின் 32ஆவது கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் கூறுகையில், மேலை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா விரும்புகிறது. ஆனால், ஆற்றல் தகுநிலை மற்றும் பிரத்தியேகத்தன்மையின் அடிப்படையில் இருப்பதற்கு பதிலாக, சமத்துவம் மற்றும் தத்தமது நலன்களுக்கு மதிப்பளிப்பதன் அடிப்படையில் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலை நாடுகளுடன் ராணுவ மற்றும் அரசியல் பகைமை பன்முகங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

“கற்பனையில் உள்ள ரஷிய அச்சுறுத்தலை” மேலை நாடுகள் பயன்படுத்தி படைக்கலப்போட்டியைத் தீவிரமாக்கி வருகின்றன. உக்ரேனுக்கு தொலைத்தூர ஆயுதங்களை வழங்குவதை அதிகரிப்பது, “உணர்வுபூர்வமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சீராக ஆயத்தம் செய்யாத அறிகுறியாகும்”. தன் நலன்களை ரஷியா பேணிகாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.