சுமார் 8 லட்சம் மக்கள் ரஃபா நகரிலிருந்து தப்பிச் சென்றனர்
2024-05-19 19:24:18

ரஃபா நகரில் கட்டாய வெளியேற்றம் பற்றிய கட்டளையை இஸ்ரேல் மே 6ஆம் நாள் முதன்முறையாக வெளியிட்டது முதல், 8 லட்சம் மக்கள் ரஃபா நகரிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேறியுள்ளனர் என்று அண்மை கிழக்கு பிரதேசத்தின் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ,நாவின் நிவாரண மற்றும் திட்டப்பணி முகமையின் இயக்குநர் 18ஆம் நாள் சமூக ஊடகத்தில் தெரிவித்தார். மக்கள் தஞ்சம் அடைந்த இலக்கிடத்தில் தூய்மையான குடிநீர் மற்றும் சரியான சுகாதார வசதிகள் இல்லை என்றும், தற்போது காசா பகுதியில் எந்த “பாதுகாப்பு மண்டலமும்” இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சில குடும்பங்கள் சராசரியாக ஒரு மாதத்தில் ஒரு முறை தங்கியிருக்கும் இடத்திலிருந்து தப்பிச் செல்ல வேண்டியிருந்தது என்று இந்த முகமை அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.