ஈரான் அரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட புவியியல் ஒருங்கிணைப்பு உறுதிப்படுத்துதல்
2024-05-20 09:53:24

முதற்கட்ட அறிக்கையின்படி, ஈரான் அரசுத் தலைவர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் அந்நாட்டின் கிழக்கு அஜர்பைஜான் மாநிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது என்று அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சி நிலையம் 19ஆம் நாள் தெரிவித்துள்ளது.

மோசமான வானிலை மற்றும் கடினமான நிலவியல் அமைப்புக்கு மத்தியில், மீட்புதவிக் குழுவினர்கள் விபத்து ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் 20ஆம் நாள் தெரிவித்தது.  

அரசுத் தலைவர் ரைசி விபத்துக்குள்ளான பகுதி டிஃபில் என்று உறுதிப்படுத்தப்பட்டது. தற்போது, மீட்புதவி அணி இந்த இடத்துக்குச் சென்றுள்ளது என்று ஈரான் அரசு சார் செய்தி நிறுவனம் 20ஆம் நாள் மேற்கோள் காட்டிக் கூறியுள்ளது. ஆனால், இத்தகவல் ஈரான் அரசால் உறுதிப்படுத்தப்படவில்லை.