தைவான் பிரதேசத் தலைவரின் உரை குறித்து சீனா கருத்து
2024-05-20 18:51:29

தைவான் பிரதேசத்தின் தலைவர் மே 20ஆம் நாள் நிகழ்த்திய உரையில் இரு கரை உறவு தொடர்பான அம்சம் குறித்து சீன அரசவை தைவான் விவகார அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் சேன் பின்ஹுவா இன்று கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில், தற்போது தைவான் நீரிணை சூழ்நிலை சிக்கலாக இருக்கிறது. ஜனநாயக முன்னேற்றக் கட்சி, தைவான் சுதந்திரம் என்ற பிரிவினை நிலைப்பாட்டில் ஊன்றி நின்று, ஒரே சீனா என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தும் 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பொது கருத்து என்ற ஆவணத்தை ஏற்றுக்கொள்ளாமல், வெளிப்புற சக்தியுடன் இணைந்து, தைவான் சுதந்திரத்தை நாடும் ஆத்திரமூட்டல் செயலில் ஈடுபட்டது இதற்கு காரணமாகும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தைவான், சீனாவின் பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். தைவான் விவகாரத்தைத் தீர்த்து, நாட்டின் ஒன்றிணைப்பை நனவாக்கும் மனவுறுதி, நாட்டின் அரசுரிமை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டைப் பேணிகாக்கும் ஆற்றல், தைவான் சுதந்திர சக்தியின் பிரிவினை மற்றும் வெளிப்புற தலையீட்டை எதிர்க்கும் செயல்கள் ஆகியவை வலுவாக இருக்கின்றன. எந்த வடிவத்திலான தைவான் சுதந்திர பிரிவினை செயலையும் சகித்து கொள்ள கூடாது என்று சுட்டிக்காட்டினார்.