இஸ்ரேலின் ராணுவ தாக்குதலுக்குப் பாலஸ்தீனத்தின் பதில் நடவடிக்கை
2024-05-20 14:51:35

காசா பிரதேசத்தின் வடக்குப் பகுதியிலுள்ள ஜபாலியா, மத்திய பகுதி மற்றும் தென் பகுதியிலுள்ள ரஃபா நகர் மீது இஸ்ரேல் ராணுவப் படை கடந்த ஒரு நாளில் தொடர்ந்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதாக அந்நாட்டு தேசிய பாதுகாப்புப் படை 19ஆம் நாள் தெரிவித்தது.

அன்று, ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த ஆயுத அமைப்பான எஸ்ஸேடைன் அல்-கஸ்ஸாம் படையணி, ஜிஹாத் புனித போர் அமைப்பைச் சேர்ந்த ஆயுத அமைப்பான குட்ஸ் படை உள்ளிட்ட பாலஸ்தீனத்தின் பல ஆயுத அமைப்புகள் இஸ்ரேல் ராணுவப் படையின் மீது எதிர்த்தாக்குதல் நடத்தின. தவிரவும், ஜபாலியாவில அகதிகளுக்கான முழு குடியிருப்புப் பிரதேசத்தையும் இஸ்ரேல் ராணுவப் படை அழித்து வருகிறது. பள்ளிகளும் அடைக்கலங்களும் இஸ்ரேல் படை தாக்குதல் மேற்கொள்ளும் இலக்காக மாறியுள்ளன என்று ஹமாஸ் இயக்கம் அன்று கண்டனம் தெரிவித்துள்ளது.