ஈரான் ஹெலிகாப்டர் தரையிறங்குதலில் பிரச்சினை சம்பவம் சீனா கவலை
2024-05-20 11:07:40

ஈரான் அரசுத் தலைவர் இப்ராஹிம் ரைசி ஏறிச்சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்குதலில் பிரச்சினை சம்பவம் சீன வெறியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் 20ஆம் நாள் கவலை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்நிகழ்வு குறித்து சீனா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. ஈரான் அரசுத் தலைவர் இப்ராஹிம் ரைசி மற்றும் ஹெலிகப்டரிலுள்ள பணியாளர்களுக்கு பாதிப்பு இருக்காது என்றும் எதிர்பார்க்கின்றோம். இதில் சீனா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. ஈரானின் மீட்புதவிப் பணிக்கு தேவையான ஆதரவு மற்றும் உதவியை சீனா வழங்கும் என்றார் அவர்.