இலங்கையில் ஸ்டார்லிங் சேவை குறித்து எலான் மஸ்க்குடன் இலங்கை அரசுத் தலைவர் சந்திப்பு
2024-05-20 17:06:51

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்கை இலங்கை அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தோனேசியாவில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இலங்கையில் ஸ்டார்லிங்க் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து விக்கிரமசிங்க கலந்துரையாடியதுடன், உலகளாவிய ஸ்டார்லிங்க் வலையமைப்புடன் இலங்கையை இணைப்பதற்கான செயல்முறையை விரைவுபடுத்த உறுதிபூண்டுள்ளதாக எலான் மஸ்கிடம் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவும்,  எலான் மஸ்க்கும்  இலங்கையின் பொருளாதார திறன் வளர்ச்சி, முதலீட்டுக்கான புதிய வாய்ப்புகள் குறித்து விவாதித்ததாக, இலங்கை நீர் வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் கூறினார்.

இந்தோனேசியாவில் ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் இணைய சேவையை தொடங்குவதற்கு மஸ்க் ஞாயிற்றுக்கிழமை பாலிக்கு வந்தார்.