காசா பகுதியில் முக்கியப் பொருட்கள் பற்றாக்குறை:ஐ.நாவின் உலக உணவுத் திட்ட அலுவலகம்
2024-05-21 09:57:44

ரஃபா பகுதியில் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதால், காசா பகுதியில் வீடுவாசலின்றி அல்லல்படும் அகதிகள் மற்றும் மனித நேய நெருக்கடி தீவிரமாகி வருகிறது. அடுத்த சில நாட்களில், காசா பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்து விடும் என்று ஐ.நாவின் உலக உணவுத் திட்ட அலுவலகம் 20ஆம் நாள் வெளியிட்டது.

வீடுவாசலின்றி துன்பப்படும் மக்களின் உயிர் பாதுகாப்பு கடும் அபாயத்தில் உள்ளது. அனைத்துப் பொருட்களையும் கைவிட்டு, உயிரை பாதுகாப்புக்கும் விதம் அவர்கள் பாதுகாப்பான விட்டு இடங்களைத் தேடி வருகின்றனர். ஆனால், அங்கு பாதுகாப்பான இடம் என்ற ஒன்றே இல்லை என்றும் இந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.