சீனாவின் இணைய வழி சில்லறை விற்பனை தொகை அதிகரிப்பு
2024-05-21 19:42:32

சீன வணிக அமைச்சகத்தின் மின்னணு வணிக அலுவல் பிரிவின் பொறுபாளர் ஒருவர் மே 21ஆம் நாள் கூறுகையில், இவ்வாண்டின் முதல் 4 மாதங்களில், சீனாவின் இணைய வழி சில்லறை விற்பனை தொகை  4 லட்சத்து 41 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 11.5 விழுக்காடு அதிகமாகும். இதில், உண்மையான பொருட்களின் இணைய வழி சில்லறை விற்பனை தொகை 3 லட்சத்து 74 ஆயிரம் கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 11.1 விழுக்காடு அதிகமாகும் என்றார்.

மேலும், ஜனவரி முதல் ஏப்ரல் திங்கள் வரை, எண்ணியல், பசுமை, ஆரோக்கியம் ஆகிய துறைகளின் பொருட்களின் இணைய வழி விற்பனை தொகை உயர்வேகமாக அதிகரித்தது. சேவை நுகர்வின் அதிகரிப்பு வேகம், ஒட்டுமொத்த அதிகரிப்பு வேகத்தை விட அதிகம். தவிரவும், மின்னணு வணிக அலுவல் பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு புதிய சாதனைகளைப் பெற்றுள்ளது. இதுவரை, 31 நாடுகளுடன் இரு தரப்பு மின்னணு வணிக அலுவல் ஒத்துழைப்பு அமைப்புமுறையை சீனா உருவாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.