பொருளாதாரத்தை மேம்படுத்த 2 மசோதாக்களை தாக்கல் செய்யும் இலங்கை அரசு
2024-05-21 17:22:49

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இரண்டு முக்கிய சட்ட மசோதாக்களை இலங்கை அரசு புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"பொருளாதார உருமாற்ற சட்ட மசோதா மற்றும் "பொது நிதி மேலாண்மை சட்ட மசோதா  ஆகியவை பொது நிதி மேலாண்மையை மேம்படுத்துவதற்கும் எதிர்கால பொருளாதார வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கும்  வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

எதிர்கால பொருளாதார நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கு உகந்த மட்டத்திலான நிதியை அரசு பேணுவது அவசியம் எனவும், சர்வதேச நாணய நிதியத்துடனான கூட்டுத் திட்டத்தின் பரிந்துரைகளுடன் இந்த சட்ட மசோதாக்கள் இணைக்கப்பட்டுள்ளன என்றும் சேமசிங்க தெரிவித்தார். மேலும் சர்வதேச வர்த்தகம், வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் காலநிலை மாற்ற பாதிப்புகள் தணிப்பு போன்ற சீர்திருத்தங்களை இந்த சட்டம் உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.

2032ம் ஆண்டிற்க்குள் இலங்கையின் பொதுக் கடன் விகிதம் 95 சதவீதத்திற்கும்  கீழ் குறைக்கப்படும் என்று சேமசிங்க கூறினார்.