பாகிஸ்தான்-சீன உறவு எப்போதும் பாறை போல உறுதியானது:ஜர்தாரி
2024-05-21 14:37:04

மே 21ஆம் நாள் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பாகிஸ்தான் அரசுத் தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார். பாகிஸ்தான் அரசுத் தலைவராக ஜர்தாரி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சீனச் செய்தி ஊடகங்களுக்கு அவர் பேட்டி தருவது முதல் முறையாகும்.

அவர் கூறுகையில், சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், பாகிஸ்தான்-சீன உறவு எப்போதும் பாறை போல உறுதியாக இருக்கும். ஒன்றுக்கு ஒன்று முக்கிய நலன்கள் மற்றும் முக்கிய கவனம் செலுத்தும் பிரச்சினைகளில் உறுதியாக ஆதரித்து, பல்வேறு இடர்பாடுகளையும் அறைகூவல்களையும் கூட்டாகச் சமாளித்து, நாடுகளுக்கிடையிலான நட்பார்ந்த தொடர்புக்கு முன்மாதிரியாக இரு நாடுகள் திகழ்கின்றன என்றார்.  

மனித குலப் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் முன்மொழிவு, மூன்று பெரிய உலக முன்மொழிவு முதலிய முக்கிய கருத்துக்கள் மனிதக் குலத்தின் நாகரிகத்துக்கும் முன்னேற்றங்களுக்கும் மாபெரும் பங்காற்றியுள்ளன என்று ஜர்தாரி தெரிவித்தார்.