பாலஸ்தீன பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2024-05-21 17:19:26

அண்மையில் பஹ்ரேனில் நடைபெற்ற அரபு நாடுகளின் லீக் கவுன்சிலின் 33வது உச்சிமாநாட்டில், பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினை விவாதிக்கப்பட்டது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் மே 21ஆம் நாள் கூறுகையில், அரபு நாடுகள் பாலஸ்தீனப் பிரச்சினையில் ஒற்றுமையை வலுப்படுத்தி, மேலும் பெரும் பங்காற்றுவதை சீனா ஆதரிக்கிறது. அரபு நாடுகளுடன் இணைந்து ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தவும், தற்போதைய பாலஸ்தீன-இஸ்ரேல் தீவிரமான சூழ்நிலையைத் தணிவு செய்து, பாலஸ்தீன பிரச்சினையை சரியான பாதையை நோக்கி முன்னேற்றுவதற்குப் பங்காற்றவும் சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.