சீன வெளியுறவு அமைச்சர் முன்வைத்த 4 முன்மொழிவுகள்
2024-05-22 19:35:10

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 21ஆம் நாள் அஸ்தானா நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் செயற்குழு கூட்டத்தில் பங்கெடுத்தார்.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் 22ஆம் நாள் இது பற்றி அறிமுகம் செய்தார். அவர் கூறுகையில், வெளியுறவு அமைச்சர் வாங்யீ 4 முன்மொழிவுகளை முன்வைத்தார். முதலாவதாக, நெடுநோக்கு சுய நிர்ணயத்தில் ஊன்றி நின்று, ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புகளை நிலைநிறுத்த வேண்டும். இரண்டாவதாக, உலகப் பாதுகாப்பு முன்மொழிவை வழிக்காட்டலாக கொண்டு, உலக அமைதியைப் பேணிக்காப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, நலன் பகிர்வு மற்றும் கூட்டு வெற்றியில் ஊன்றி நின்று, ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கு இயக்காற்றலை ஊட்ட வேண்டும். நான்காவதாக, திறப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையில் ஊன்றி நின்று, பரிமாற்றத்தை ஆழமாக்கி, பல்வேறு நாட்டு மக்களுக்கிடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்த வேண்டும் என்றார்.

அரசியல் மற்றும் தூதாண்மை வழிமுறையின் மூலம் தற்போதைய முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் எனவும், பல்வேறு நாடுகளின் அரசுரிமை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டுக்கு மதிப்பு அளித்து, ஐ.நா சாசனத்தின் செல்வாக்கைப் பேணிக்காத்து, ஒருதரப்புவாதத்தை எதிர்த்து, உலக பலதுருவமயமாக்கத்தை முன்னேற்ற வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் பங்கெடுத்த பல்வேறு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் கூறினர் என்று வாங் வென்பின் தெரிவித்தார்.