அணுப் பாதுகாப்பு உத்தரவாதம் குறித்த சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் கூட்டறிக்கை
2024-05-22 09:40:26

ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெற்று வருகின்ற சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் அமைச்சர் நிலை அணு பாதுகாப்பு மாநாட்டில் கூட்டு அறிக்கை ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அணு பாதுகாப்பு, ஒரு நாட்டின் பொறுப்பாகும். உலகெங்கிலும் எண்ணியல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு முதலிய புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலைமையில், இந்த தொழில்நுட்பங்களால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அபாயங்களைச் சமாளிக்கும் வகையில், அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனப் பிரதிநிதி உரை நிகழ்த்திய போது, அணு பாதுகாப்பு திறனைச் சீன அரசு தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றது. தொடர்ச்சியான விதிமுறைகளை வெளியிட்டு வருவதன் மூலம் அணு பொருட்கள் மற்றும் அணு வசதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தெளிவாக உள்ளன. அவசரநிலைக்குப் பதிலளிக்கும் அணுசக்தி வசதிகளின் திறனை உயர்த்தும் வகையில், விரிவான பாதுகாப்பு பயிற்சிகளை வழக்கமாக ஏற்பாடு செய்து வருகின்றது என்றார்.